TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு

You are currently viewing TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை TNRD வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNRD நாமக்கல் காலிப்பணியிடங்கள்:

ஈப்பு ஓட்டுநர் – 1 பணியிடம்

TNRD சம்பளம்:

ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500 – ரூ. 62,000/-

கல்வித் தகுதி:

8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் நாமக்கல் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNRD தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை namakkal.nic.in என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 21.01.2023 முதல் 31.01.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணிக்குள் பெறத்தக்க வகையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண். 06, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாமக்கல் – 637 003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

Important links

Official WebsiteClick Here
Official Notification & Application FormClick Here