நீலகிரி மாவட்டத்தில் 63 செவிலியர் பணியிடங்கள்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில்,நீலகிரி மாவட்டத்தில் உள்ள 63 செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதார்கள் அதிகப்பட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,Nursing)/தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council)
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் உள்ளவர்கள் https://nilgiris.nic.in/என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Executive Secretary / Deputy Director of Health Services, The Nilgris District Health Society, O/o. Deputy Director of Health Services, 38 Jail Hill Road, Near CT Scan Centre, The Nilgiris District.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 27.01.2023 மாலை 5 மணி
Official Website | Click Here |
Official Notification | Click Here |